பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2013


இலங்கை விவகாரம்: சென்னையில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு: கவர்னர் மாளிகை முற்றுகை
இலங்கை விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாகவும், கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில்
ஈடுபடப்போவதாகவும் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கம், பெண் வக்கீல் சங்கம் உட்பட எல்லா வக்கீல் சங்கங்களும் சேர்ந்து கூட்டாக அறிவிப்பு வெளியிட்டது. அதில், சென்னை ஐகோர்ட்டு, செசன்சு கோர்ட்டுகளில், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் வக்கீல்கள் இன்று (புதன்கிழமை) புறக்கணிக்க வேண்டும் என்றும், சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கவர்னர் மாளிகையை முற்றுகையிட வேண்டும் என்றும் அறிவித்தனர்.