பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2013


கொந்தளிக்கும் மாணவர்கள்!- இலங்கையுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது இந்தியா
தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக மாணவர்களின் தொடர் போராட்டம் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், இலங்கையுடன் இந்தியா அடுத்த வாரம் நடத்த இருந்த பேச்சுவார்த்தையை மத்திய அரசு திடீரென இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நாடுகள் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றன.
தற்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தை வலுவானதாக்கி இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதேவேளை, தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது.
இந்நிலையில், எதிர்வரும் மார்ச் 23-ம் திகதி இடம்பெறவிருந்த இந்தியா-இலங்கை நாடுகளின் பாதுகாப்புத்துறை செயலர் நிலையிலான பேச்சுவார்த்தையை இந்தியா இரத்து செய்துள்ளது.
எனினும் இந்த பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.