பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2013


இலங்கை தீர்மானம் தொடர்பில் கலந்துரையாட ஜெனீவா பிரதிநிதியை இந்தியா புதுடில்லிக்கு அழைப்பு
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாட ஜெனீவா பிரதிநிதியை இந்திய அரசாங்கம் புதுடில்லிக்கு அழைத்துள்ளது.
இலங்கைக்கு எதிராக அமரிக்கா, ஜெனீவாவில் முன்வைத்துள்ள யோசனையின் இறுதி வரைபு தொடர்பில் நாளை முக்கிய கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக இந்திய தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிரான யோசனைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த அறிவிப்பை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இதற்காக இந்தியாவின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதிநிதி திலிப் சின்ஹாவும் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான வரைபு தொடர்பில் அரசாங்கத்தின் உயரதிகாரிகளுக்கும் விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சு பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னரே இலங்கைக்கு எதிரான அமெரிக்க யோசனை தொடர்பில் இந்திய முடிவு அறிவிக்கப்படும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.