பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2013

இலங்கை வீரர்கள் விளையாடாதது வருத்தமளிக்கிறது.விளையாட்டை விளையாட்டா தான் பார்க்கனும் -NDTV யின் விவாதத்தில் குஷ்பு #

தமிழில் நடித்து கோடிகோடியாக சம்பாதித்தும், சுந்தர்சியை திருமணம் செய்து தமிழகத்தின் மருமகளாகிவிட்டும் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்கள் மீது அக்கறையே இல்லாமல் குஷ்பு பேசும் பேச்சு அரைவேக்காட்டுத்தனமானது.இலங்கை வீரர்களுக்கு சென்னையில் விளையாட தடை விதித்திருப்பது வரவேற்கதக்க ஒன்று! மற்ற மாநில மக்களும் வீரர்களும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து துளியாவது தெரிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த தடை விதிப்பு ஏற்படுத்தியுள்ளது.இலங்கை படுகொலைகளை மறைத்து செய்தி வெளியிடும் வடநாட்டு ஊடங்கங்கள் போல் தானே வடநாட்டிலிருந்து வந்த குஷ்புவும் நடந்துக்கொள்வார்! இலங்கைத் தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று கூறும் திமுகாவில் இருந்துகொண்டு பொறுப்பில்லாமல் பேசும் குஷ்புவை இன்னுமா கட்சியில் சேர்த்திருக்க வேண்டும் ??? உண்மையான இன உணர்விருந்தால் நீக்குங்கள் !