பக்கங்கள்

பக்கங்கள்

4 மார்., 2013


அமெரிக்காவின் திருத்தப்பட்ட பிரேரணை இன்று சமர்ப்பிப்பு
அமெரிக்காவின் திருத்தப்பட்ட பிரேரணை இன்று மனித உரிமைகள் மாநாட்டில் சமர்பிக்கப்படுகிறது. அமெரிக்காவினால் இந்த முறை மனித உரிமைகள் மாநாட்டில் சமர்பிக்கப்படவிருந்த பிரேரணை கண்டிப்பாக தங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்ற நிலையை உணர்ந்த அரசாங்கம், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் இறங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏசியன் ட்ரிபியுன் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தகவல்கள் திணிக்கப்பட்ட குழு ஒன்று அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு அமெரிக்காவின் இராஜதந்திரிகளை சந்தித்து, மறைமுகமாக இந்த பிரேரணையில் உள்ள உறுதிப்பாடுகளுக்கு இணக்கத்தை வெளிப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அமெரிக்கா தாக்கல் செய்யவிருந்த பிரேரணை கடந்த வருடத்தை போலவே, இந்த வருடமும் சீர்த்திருத்தம் செய்யப்பட்டு இன்று முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில் இலங்கை இவ்வாறான இராஜதந்திர முன்னெடுப்பை அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்துக்கது.