பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2013


நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை?
ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறியுள்ள நிலையில், அக்கட்சியின் கோரிக்கைப்படி நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பான தீர்மானத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது. இவ்வாறு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வோம் என்று திமுக தெரிவித்துள்ளது. திமுகவின் கோரிக்கை குறித்து மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து வருவதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.