பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2013


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறத்தி புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள
து.
பகல் 12 மணி அளவில் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கியது. அப்போது கடந்த பட்ஜெட்டில் அறிவித்த எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாததை கண்டித்து அதிமுக, காங்கிரஸ், திமுக கட்சிகளின் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அனைவரும் அவையை விட்டு வெளியேறினார்கள்.
ஆளுநர் உரை முடிந்த உடன் சபாநாயகர் எழுந்து இலங்கைக்கு எதிரான மனித உரிமை ஆணைய கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்தார்.
இந்த தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர் இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் தீர்மானம் குறித்து பேச அனுமதிக்கக் கோரி திமுக, அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். இதறகு மறுப்பு தெரிவித்த சபாநாயகர், கூட்டத்தை வரும் 25 ஆம் தேதிக்கு‌ஒத்திவைத்தார்.