பக்கங்கள்

பக்கங்கள்

8 மார்., 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை
இந்தியா ஆதரிக்கும் : குலாம் நபி ஆசாத் உறுதி


இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று டெல்லியில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கில் உறுப்பினர்களிடம் குலாம் நபி ஆசாத் உறுதி கூறினார். 



தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற டெசோ கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி , கி.வீரமணி, சுப.வீரபாண்டியன், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், சுதர்சன நாச்சியப்பன், சித்தன் ஆகியோர் பங்கேற்றனர். தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே பங்கேற்றார்.