பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2013


தமிழக சட்டப்பேரவையில் இருந்து தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் ஓராண்டு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவை சபாநாயகர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். 
இந்த நடவடிக்கையை கண்டித்து தே.மு.தி.க., -தி.மு.க., -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் செந்தில் குமார், அருள்செல்வன், சந்திரகுமார், முருகேசன், பார்த்திபன், நல்லதம்பி ஆகியோர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தே.மு.தி.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார்: சட்டப்பேரவைக்குள் ஜனநாயகப் படுகொலை நடக்கிறது.
சட்டப்பேரவை நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் மக்களுக்கு உண்மை தெரிய வரும் என்றார்.