பக்கங்கள்

பக்கங்கள்

25 மார்., 2013



இலங்கை தலைநகர் கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று அனுப்பியுள்ள கடிதத்தில்,

கொழும்பில் நவம்பர் 15 முதல் 17-ம் திகதி வரை நடைபெற உள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டை இலங்கையில் இருந்து வேறு ஒரு நாட்டுக்கு மாற்றுமாறு நெருக்கடி கொடுக்க வேண்டும். இப்படி கொழும்பு மாநாட்டை புறக்கணிப்பதன் மூலமே இலங்கையில் தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை நடத்தக் கூடாது என்று கனடா வலியுறுத்தி வருகிறது. கொழும்பு பொதுநலவாய நாடுகள் மாநாட்டை இங்கிலாந்தும் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசும் இந்திய அரசு, கொழும்பு பொதுநலவாய நாடுகள் மாநாட்டைப் புறக்கணிக்க வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.