பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2013


மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்த சுப்பிரமணியன்சுவாமியின் உருவப்படம் எரிப்பு!- திருச்சியில் பரபரப்பு
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஈழத் தமிழருக்கு எதிராக செயல்படும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன்சுவாமிக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சியினர் திருச்சியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
திருச்சி ரயில் நிலையம் அருகே இன்று ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர், சுப்பிரமணியன்சுவாமிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தமிழருக்குத் துரோகம் செய்யும் சுப்பிரமணியன் சுவாமியை தமிழ்நாட்டுக்குள் விடக் கூடாது என்றும் இந்தியாவில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல்கள் எழும் நிலையில் துரோகம் செய்து வரும் அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் சுப்பிரமணியன் சுவாமியின் உருவப் படத்தை 'துரோகி ஒழிக' என்ற முழக்கங்களுடன் காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியினரும் ஈழத் தமிழருக்கு ஆதரவாக களம் இறங்கியது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.