பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2013


கொம்பனித்தெரு கொள்ளை சம்பவம்: 3 பொலிஸார் உட்பட 7 பேர் கைது

கொம்னித்தெரு பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 மில்லியன் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் மூன்று பேர் பொலிஸார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.


இதேவேளை கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒருதொகை பணம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளை கோஷ்டிக்கு உதவிய பொலிஸாரில் இருவர் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதோடு மற்றையவர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவராவார்
.