பக்கங்கள்

பக்கங்கள்

15 மார்., 2013

தெலுங்கு பெண்ணின் தமிழர் பாசம்
news
ஈழத் தமிழர் விவகாரம் தமிழ் நாட்டை எரிமலையாகக் குமுற வைத்துள்ள நிலையில், அங்கு தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தொடர் உண்ணா நிலைப் போராட்டத்தில் தெலுங்குப் பெண் ஒருவரும் ஈடுபட்டுள்ளார். சென்னை, அடையாறில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்து வரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு ஈழத் தமிழர்களின் நலனுக்காக போராட்டத்தில் குதித்துள்ளார்.
 
உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனது கல்லூரியைச் சேர்ந்த சக மாணவர்கள் 8 மாணவர்களுடன் தனி ஒரு பெண்ணாக அவர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.