பக்கங்கள்

பக்கங்கள்

9 மார்., 2013



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஸ்ட உறுப்பினர்களுடன் சந்திரிக்கா விரைவில் பேச்சுவார்த்தை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா  குமாரதுங்க பேச்சுவார்த்தை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு தேர்தல் தொகுதி வாரியாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் நோக்கிலேயே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாகத் தெரிகின்றது.
முதல் கட்டப் பேச்சுவார்த்தை இம்மாத இறுதியில் குருணாகளில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரே இந்த கூட்டங்களை ஒழுங்கு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
.