பக்கங்கள்

பக்கங்கள்

12 மார்., 2013


டெசோ அமைப்பின் பொது வேலைநிறுத்தம்: திருச்சியில் கே.என்.நேரு உட்பட 500 பேர் கைது
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி,
நகரச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட திமுகவினர் டெசோ வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசு இலங்கை தமிழர் விவகாரத்தில் உரிய நடவடிக்கையை உடனே எடுத்திடு, அமெரிக்க அரசு கொண்டு வரும் தீர்மானத்தை உடனே ஆதரிக்க வேண்டும் கோஷம் எழுப்பினர். பின்னர் சாலை மறியல்  செய்தனர். அப்போது திருச்சி மாநகர டிசி செல்வக்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி வாசவி திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். 
டெசோ அமைப்பின் அழைப்பில் பேரில், வணிகர்கள் திருச்சியில் முழு ஒத்துழைப்பு தந்ததாக கே.என்.நேரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவே எங்களுக்கு முழு வெற்றி என்றார்.