பக்கங்கள்

பக்கங்கள்

22 மார்., 2013


இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு பரக் ஒபாமா வரவேற்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா வரவேற்றுள்ளார்.
இந்தத் தீர்மானம் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலும் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் டொமி வெய்டர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு விரிவான அளவில் உலக நாடுகள் ஆதரவளித்து வந்தமை வரவேற்கப்பட வேண்டியது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் பொறுப்பு கூறல் போன்றவற்றை உறுதிப்படுத்த சரியான பொறிமுறைமை ஒன்றை உருவாக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இலங்கையின் முக்கியமான முயற்சிகளுக்கு பங்குதாரராக விரும்புகின்றோம்.
நாட்டில் நல்லிணக்கம், சுபீட்சம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டு தீர்மானம் வழியமைக்கும் என ஜனாதிபதி ஒபாமா நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் டொமி வெய்டர் தெரிவித்துள்ளார்.