பக்கங்கள்

பக்கங்கள்

20 ஏப்., 2013


பாரிய அகதிகள் படகொன்று அவுஸ்திரேலியாவில் தஞ்சம்
பாரிய அகதிகளை ஏற்றிய  படகொன்று அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் படகில் 153 அகதிகள் பயணித்துள்ளதாகவும், குறித்த படகு அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதிகளவான அகதிக் கோரிக்கையாளர்கள் ஒரே தடவையில் கிறிஸ்மஸ் தீவில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டகில் மூன்று படகோட்டிகளும், நூற்றைம்பது அகதிகளும் பயணித்துள்ளனர்.
அகதிகள் கிறிஸ்மஸ் தீவி;ற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அகதிப் படகில் பயணித்தவர்கள் இலங்கையர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்தத் தகவல்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.