பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2013



முன்னாள் மகளீர் அரசியல் துறைப் பெறுப்பாளர் தமிழினியும் முன்னாள் புலிகளின் விளையாட்டில்


புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளுக்கான சித்திரை புத்தாண்டு சிறப்பு விளையாட்டு நிகழ்வுகள் இன்று வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில் மருதமடு, கந்தக்காடு, சேனபுர மற்றும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து புனர்வாழ்வு பெறும் ஆண், பெண், முன்னாள் போராளிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே, புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்சன் ஹெட்டியாராச்சி, வவுனியா நகரசபையின் தலைவர் ஐ.கனகையா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.