பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2013


சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: ஜெ.,
டெல்லியில் இன்று நடைபெற்ற தலைமை நீதிபதிகள், முதலமைச்சர்களுக்கான மாநாட்டில் தமிழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா 
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தின் நகராட்சி நிர்வாகம்,  சட்டம், நீதிக்கான அமைச்சர் கே.பி.முனுசாமி இந்த மாநாட்டில் பங் கேற்று, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கையை இந்த மாநாட்டில் வாசித்தார்.
அந்த அறிக்கையில், பிராந்திய மொழி வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களும் நீதித்துறை  நடவடிக்கைகளில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகப் பயன்படுத்த வேண்டும்.. என்று அவர்