பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2013

சேலம் : ஆபாச நடன நிகழ்ச்சிகள் ரத்து
 
சேலம் மாவட்டம் வீரபாண்டியை அடுத்த கல்பாரப்பட்டி அருகே உள்ள ஊத்து கிணத்து பகுதி யில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.

 
இந்த திருவிழாவுக்காக நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை உயர்நீதி மன்றத்தின் அனுமதி பெற்று இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஆபாசமாக நடனமாடுவதாக தெரிய வந்ததும் அந்த நடன நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு ஆட்டையாம் பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அந்த நடன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
 
இதே போல இனாம் பைரோஜி பகுதியில் குறவன்-குறத்தி ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. பெண்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு ஆபாச வார்த்தைகள் பேசி இந்த நிகழ்ச்சியை நடத்தியதால் அதை ரத்து செய்யுமாறு ஆட்டையாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அந்த குறவன்-குறத்தி ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது.