பக்கங்கள்

பக்கங்கள்

19 ஏப்., 2013


சிங்களவர் ஒருவரைத் தாக்கியமைக்காக இரண்டு தமிழர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை

சிங்களவர் என்ற காரணத்தினால் குறித்த தமிழர்கள் அவரைத் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 30 வயதான அன்ஜலோ லாசரஸ் மற்றும் 32 வயதான சேதுலிங்கம்
சின்னவேகம் ஆகிய இரண்டு தமிழர்களுக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சிங்களவர் ஒருவரைத் தாக்கியமைக்காக இரண்டு தமிழர்களுக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வெம்பிலி நகரில் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 12ம் திகதி குறித்த நபர்கள் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவத்துடன் தொடர்புடைய லாசரஸிற்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சின்னவேகத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.