பக்கங்கள்

பக்கங்கள்

19 ஏப்., 2013

சிரியாவின் முக்கிய ராணுவத்தளம் போராளிகளின் வசம் வீழ்கிறது
சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராளிகள் இரண்டு வருடங்களுக்கு மேலாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் அதிபரின் படை பின்னடைவை சந்தித்து வருகிறது. 

இந்நிலையில் சிரியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள் ஹோம்ஸ் நகரில் உள்ள டாபா ராணுவத்தளத்தை கைப்பற்றும் நோக்கில் கடந்த சில நாட்களாக போராளிகள் கடும் சண்டையிட்டு வருகின்றனர். லெபனான் அருகில் உள்ள இந்த பகுதியை தங்களுடைய ஆளுகையின் கீழ் கொண்டுவர நடந்த இந்த உச்ச கட்ட சண்டையில், இன்று அந்த ராணுவத்தளத்தின் பெரும்பகுதியை போராளிகள் கைப்பற்றியுள்ளனர். 

தலைநகர் டமாஸ்கசுடன் நேரடி தொடர்பில் இருந்த இந்த ராணுவத்தளம் போராளிகள் வசம் வீழ்ந்து வருவது அதிபர் ஆசாத்துக்கு மிகப்பெரும் பின்னடைவு என்று கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் போராளிகள் சண்டையிட்டு வருவதாக ஆசாத் குற்றம் சாட்டியுள்ளார்.