பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2013



ஞானதேசிகனுடன் திருமாவளவன் சந்திப்பு

மரக்காணம் கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சமூக நல்லிணக்க கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து அழைப்பேன் என்று
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு விடுத்தார்.

அதன்படி தி.மு.க. தலைவர் கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்டு மாநில தலைவர் தா.பாண்டியனை சந்தித்துப் பேசினார். நேற்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். இன்று மதியம் 12.50 மணியளவில் திருமாவளவன் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனை கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சந்தித்தார். 
இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் சார்பில் பாரமலை, முன்னாள் எம்.எல்.ஏ. மாறன், ஜோதி, தணிகாச்சலம், விஜயன், முன்னாள் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சைதைரவி, கவுன்சிலர் தமிழச் செல்வன், விடுதலை சிறுத்தை சார்பில் ரவிக்குமார், சிந்தனை செல்வன், வெற்றி செல்வன், வன்னியரசு, எழில் இமையன், தமிழ்கதிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.