பக்கங்கள்

பக்கங்கள்

30 ஏப்., 2013


நடிகர் பவர் ஸ்டாரை பிற கைதிகள் சந்திக்க தடை
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் 60 வயது ரங்கநாதன். தொழிலை விரிவுபடுத்த சென்னையை சேர்ந்த பாபா டிரேடிங் நிதி நிறுவன உரிமையாளர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை கடந்த ஆண்டு சந்தித்து 20 கோடி கடன் கேட்டுள்ளார். அதற்கு 50 லட்சம் கமிஷன் கொடுத்தால் கடன் வழங்க ஏற்பாடு செய்வதாக சீனிவாசன் கூறியுள்ளார்.

இதையடுத்து சீனிவாசனிடம் 50 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சீனிவாசன் 20 கோடி தராமல் இழுத்தடித்துள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில் கடந்த 26ம்தேதி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்து சீனிவாசன் வேலூர் மத்திய சிறைக்கு அன்று நள்ளிரவு மாற்றப்பட்டுள்ளார்.

பவர் ஸ்டார் சீனிவாசனை சந்திக்க வேலூர் சிறையில் கைதிகளிடையே ஆர்வம் ஏற்பட்டு அவரை காண முண்டியத்து போய்வுள்ளனர். இதனால் அதிருப்தியான வார்டன்கள் சிறை அதிகாரிகளிடம் கூற அவர்கள் சிறையில் உள்ள மற்ற கைதிகள் பவர் ஸ்டாரை சந்திக்க தடை விதித்துள்ளனர். 

சாதாரண வகுப்புக்கான அறையிலே அவர் அடைக்கப்பட்டுள்ளார்.