பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2013


மனோ கணேசன் அனுதாப அரசியல் செய்ய முயற்சிக்கிறார்!- கணபதி கனகராஜ்
மனோ கணேசன் அனுதாப அரசியல் செய்ய முயற்சிக்கிறார் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உதவிச் செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆர்பபாட்டம் எதையும் ஒழுங்கு செய்யவில்லை.
உயர்த்தப்பட்ட சம்பள உயர்வில் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை.
இதேபோன்ற போலிப் போராட்டங்களை நம்பி ஏமாந்து போன தோட்டத் தொழிலாளர்கள் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசை பொறுப்பேற்க முடியாது.
எதிர்வரும் மத்திய மாகாண சபை தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பதற்காக மனோ கணேசன் உட்பட பல மலையக தொழிற்சங்களுக்கு களம் ஒன்று தேவைப்படுகின்றது.
அதற்கு அப்பாவி தோட்டத் தொழிலாளர்களை பகடைக்காய்களாக பயன்படுத்த எடுத்த முயற்சி தோட்டத் தொழிலாளர்களாலேயே முறியடிக்கப்பட்டுள்ளது என்பதுதான் யதார்த்தம்.
இந்த யதார்த்தத்தை புரிந்து கொண்டு மக்களுக்கு தொடர்ச்சியாக சேவை செய்யவேண்டுமே தவிர அறிக்கை அரசியலும், போலிப் போராட்டமும் மலையகத்தில் அரசியல் செய்வதற்கான ஆயுதங்கள் அல்ல என்பதை கொட்டகலை நிகழ்வுகள் எடுத்து சொல்லியிருப்பதை மனே கணேசன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கணபதி கனகராஜ்.
மத்திய மாகாணசபை உறுப்பினர்.
உதவிச் செயலாளர்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்