பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2013


தொடர்ந்தும் அரசாங்கம் நழுவ முடியாது! எம்ரிவி- எம்பிசி ஊடகங்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து ஸ்ரீரங்கா
தொடர்ந்தும் அரசாங்கம் நழுவல் போக்கை மேற்கொள்ள முடியாது. இவ்வாறு எம்ரிவி- எம்பிசி நிறுவன ஊடகவியலாளர்கள் மீது விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
சக்தி நிறுவனத்தை அடித்து உடைப்போம் என்று தெரிவிக்கப்படுகின்ற விடயம் ஒரு புதிய விடயமல்ல. நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றதொரு விடயம் இது.
உண்மையில் இந்த நிறுவனம் மக்கள் மயப்படுத்தப்பட்டு மக்களுக்குத் தேவையான விடயங்களைச் செய்து வருகின்றது.
இந்த நிறுவனம் ஊடாக ஊழல், இலஞ்சம், மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகின்ற அரசியல்வாதிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றின் செயற்பாடுகள் தொடர்பிலான உண்மைகள் வெளிக்கொணரப்படுகின்றன.
அவற்றைப் பிடிக்காத சிலர்தான் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள்.
ஆயுததாரிகளால் வெடி வைக்கப்பட்டது, பின்னர் கற்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
பல மனித உரிமை மீறல்களை அரசு செய்துள்ளதாக இன்று சர்வதேசம் குற்றம் சாட்டுகிறது.
இந்நிலையில், இவ்வாறான நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்குத் தள்ளும்.
தொடர்ந்தும் அரசாங்கம் நழுவல் போக்கை மேற்கொள்ள முடியாது என்றார் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா.