பக்கங்கள்

பக்கங்கள்

4 ஏப்., 2013


காங்கிரசை நாடு கடத்த வேண்டும் : சேலத்தில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
ஈழ தமிழர்களின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம்
தொடர்ந்து நடந்து வருகிறது....அதை கட்டுக்குள் கொண்டு வரவேண்டி தமிழகம் முழுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது தமிழக அரசு...பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்றிலிருந்து(ஏப்ரல் 3)  தமிழக கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது .

மூடியது கல்லூரியின் கதவுகள் தான் எங்கள் இதயங்கள் அல்ல! எங்கள் இதயங்களில் எரிந்து கொண்டு இருக்கும் தீ!  தமிழீழம் மலர வேண்டும் என்ற கொள்கை தீ!அது இலக்கை அடையும் வரை ஓயாது! அணையாது!' என்றவாறே  சேலம் வின்செண்டில் இருக்கும்  அரசு கலை கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முன்னதாக முள்ளுவாடி கேட் அருகே இருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகை இட முயற்சித்து கல்லூரியில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் புறப்பட்டனர்...ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கே குவிக்கப்பட்டு கல்லூரி வாசலிலேயே மாணவர்கள் தடுக்கப்பட்டனர் எனவே தங்கள் உணர்வை காட்டும் விதமாக அவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்....ஆனாலும் சில நிமிடங்களில் குண்டு கட்டாக தூக்கி அவர்களை காவல்துறை கல்லூரிக்குள் அனுப்பினர்.

மாணவர்கள் சார்பாக பேசிய மனோஜ் மற்றும் மாணவர்கள் 'எங்கள் தமிழினம் உறவுகள் அங்கே அழிக்கப்பட்டுள்ளது அவர்களை அழித்த ஆயுதங்கள் காங்கிரஸ் இந்திய மத்திய அரசு தந்தவைகள்....அப்படியிருக்க இங்கே உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நீலி கண்ணீர் வடிக்கின்றனர் மறுபுறம் ஈழ தமிழர்களுக்கு எதிராக உள்ளனர் நம் இனத்திற்காக ஜனநாயக முறையில் போராடிய மாணவர்களை காங்கிரஸ் குண்டர்கள் தாக்கியுள்ளனர்.

இங்கே அதை கண்டித்து நாங்கள் ஒட்டிய போஸ்டர்களை அவர்கள் கிழுத்துள்ளனர் இதையெல்லாம் காவல்துறை கண்டுகொள்வதில்லை ஆனால் போராடும் மாணவர்களை மட்டும் தடுத்து ஒடுக்கி வருகிறது தவறு செய்த காங்கிரஸ் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு போட்டு வருகிறது .

காங்கிரசிற்கு தில் இருந்தால் எங்கள் கல்லூரி முன் வந்து எதிர்க்கட்டும் பார்க்கலாம்....தமிழினத்திற்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியையே நாடு கடத்த வேண்டும் இம்மண்ணை விட்டு விரட்ட வேண்டும் இலங்கைக்கு சாதகமாகவே தீர்மானம் போட்ட அமெரிக்காவை எதிர்க்கும் விதமாக அவர்களின் கோக் பெப்சி பொருட்களை நாங்கள் புறக்கணிக்கிறோம் .

தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது. கல்லூரி திறந்தாலும் மூடினாலும் எங்கள் இதயங்களில் எரிந்துகொண்டு இருக்கும் தனி ஈழ தீ அணையாது'
என்றனர் உணர்ச்சிப்பூர்வமாக.
- இளங்கோவன்