சர்வதேச போர் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்; அக்சன் பாம் வலியுறுத்தல் |
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அக்சன் பாம் நிறுவனத்தின் மனிதாபிமான சட்ட ஆலோசகர்
போலின் செற்கியூற்றி வலியுறுத்தியுள்ளார்.சிறிலங்காவின் இராணுவமே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிறிலங்காவையே சொந்தமாக விசாரணை நடத்தும்படி கோருவது முரணானது. மூதூர் படுகொலைகள் குறித்து சிறிலங்காவின் மூன்று நீதி விசாரணைகளை நெருக்கமாக அவதானித்தோம்.ஆனால் அரசியல் தலையீடுகள் மற்றும் தவறுகளால் விசாரணைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுபறியாக உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்காவில் இடம்பெற்ற போரின் போது தமது 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குப் பொறுப்பானவர்களை சிறிலங்கா அரசாங்கம் கண்டறிந்து இதற்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது முக்கியமானது. சிறிலங்காவில் எமக்கு உண்மையான அமைதி, நல்லிணக்கம், நீதி தேவையென்றால், எந்தவொரு விசாரணைகளும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அக்சன் பாம் வரவேற்கிறது. ஆனால் இத்துடன் இது முடிந்து விடாது. ஏனென்றால் தீர்மானத்தின் வாசகங்கள் கடுமையானவை அல்ல என அவர் சுட்டிக்காட்டியதுடன், எல்லாவற்றை செய்வதற்கு இது சிறிலங்காவுக்கு உறுதியான அழுத்தம் கொடுக்கவில்லை.போர்க்குற்றங்கள் குறித்து நம்பகமான அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். |
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼