பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2013


தெஹிவளையில் கழிவு போடும் குழியை சுத்திகரிக்கச் சென்ற இருவர் பலி
தெஹிவளை - ஹத்யிடியே பிரதேசத்தில் கழிவுப் பொருட்களை போடும் குழி ஒன்றை சுத்திகரிக்க முயற்சித்த இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. கழிவுக் போடும் குழியில் விசவாயு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.