பக்கங்கள்

பக்கங்கள்

8 ஏப்., 2013


இந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: வைகோ
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் ரிக்கை விடுத்துள்ளார்.

ஈழப்பிரச்சினைகளுக்காக ஓங்கிக் குரல் கொடுத்துவரும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், ராஜபக்சவை உலக நாடுகள் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும். 
இந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவித்தார்.