பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2013


சந்திரிகா தொடர்பில் கடும் அச்சத்தில் அரசு

 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள்  ஜனாதிபதி  சந்திரிக்காவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள்  பலர் நெருங்கிய தொடர்புகளுடன் அவர்கள் இரகசிய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவே அவர்களது செயற்பாடுகளை ஆராய அரசாங்கம் விசேட குழுவொன்றை அமைத்துள்ளது.
அரசாங்கத்தில் உள்ள சிரேஷ்ட உறுப்பினர்களின் ஆலோசனையுடன் இளம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்ற நிலையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி தெரிவு செய்யப்பட்ட குழுவினர் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கையொன்றினை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களிடம் சமர்ப்பதுடன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.