பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2013



இத்தாலியின் ஜனாதிபதியாக மீண்டும் ஜோர்ஜியோ நெப்போலிட்டானோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
 அவரது பதவிக்காலம் எதிர்வரும் மே 15 உடன் முடிவடையவிருந்த நிலையில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.இத்தாலியில் அதிகரித்துவரும் அரசியல்
நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரபல கட்சிகள் சில விடுத்த கோரிக்கைக்கு  அமைய ஜோர்ஜியோ நெப்போலிட்டானோ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
87 வயதான ஜோர்ஜியோவிற்கு ஜனாதிபதியாவதற்கு பாராளுமன்றத்தில் தேவையான 504 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
ஜோர்ஜியோவைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அந்நாட்டு பாராளுமன்றத்தில் 5 தடவைகள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோதிலும் அது பலனிக்கவில்லை.
இத்தாலிய வரலாற்றில் இரண்டாவது தடவையாகவும் 7 வருட ஆட்சிகாலத்திற்கு தெரிவாகிய முதல் ஜனாதிபதியாக ஜோர்ஜியோ நெப்போலிட்டானோ  பதிவாகியுள்ளார்.