பக்கங்கள்

பக்கங்கள்

22 ஏப்., 2013


ஐ.பி.எல். இல் அதிக விக்கெட் : மலிங்கவை சமன் செய்தார் மிஸ்ரா

லசித் மலிங்க 59 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் வீரர் லசித் மலிங்கவை சமன் செய்தார்.இதுவரை இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான லசித் மலிங்கவை சமன் செய்துள்ளார் ஐதராபாத் அணியின் அமித் மிஸ்ரா.
அமித் மிஸ்ரா 66 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதேவேளை, 17 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதே இவரது சிறந்த பந்துவீச்சு பெறுதியாகும்.
இதேவேளை, தற்போது நடைபெற்று வரும் 6ஆவது ஐ.பி.எல். போட்டியில் அமித் மிஸ்ரா அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி (11 விக்கெட்) முன்நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.