பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2013


விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைய விதித்த தடையை எதிர்த்து திருமாவளவன் வழக்கு
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்,  ‘’விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கடந்த 16-ந்தேதி
பிறப்பித்த உத்தரவில் விழுப்புரம் மாவட்டத்தில் நான் நுழைவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.


நான் சிதம்பரம் தொகுதி எம்.பி.யாக உள்ளேன். விழுப்புரம் மாவட்டம் வழியாக தான் எனது தொகுதிக்கு செல்ல வேண்டும். கலெக்டர் பிறப்பித்த தடை உத்தரவால் எனது தொகுதிக்கு செல்லவோ தொகுதி மக்களின் குறைகளை கேட்கவோ முடியாத நிலை உள்ளது. எனவே இந்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.