பக்கங்கள்

பக்கங்கள்

22 மே, 2013


மதுரை கலெக்டர் அலுவலக அதிகாரி மீது பாலியல் புகார்! கணவருடன் நேரில் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த பெண்!
மதுரை கலெக்டர் அலுவலக வட்ட வழங்கல் அதிகாரியாக இருப்பவர் ராஜேந்திரன். இவர் கடந்த வாரம் முசிலம்பட்டி வருவாய் கோட்ட அலுவலகராக கூடுதல் பொறுப்பு
வகித்து வந்தார்.

உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவர், (கணவர் பெயர் கருப்பையா) தனது இல்லம் சம்மந்தமாக வருவாய் கோட்டாட்சி அலுவலர் ராஜேந்திரனிடம் மனு கொடுக்க சென்றபோது, தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக, மதுரை மாவட்ட ஆட்சியர் அனுசுல் மிஸ்ராவிடம் நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.
இதற்கிடையில் ராஜேந்திரன் இரண்டு மாத விடுப்பில் சென்றுள்ளார். இருப்பினும் அனிதா கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது. 
கணவருடன் பெண் ஒருவர் கலெக்டர் அலுவலத்தில், அங்கு பணிபுரியும் அதிகாரி மீது பாலியல் புகார் கொடுத்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 
நமது நிருபர்