பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2013



கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் உட்பட தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 அதிமுக வேட்பாளர்கள் உள்பட தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி அடைந்தனர்.


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் பெங்களூரு காந்தி நகரில் போட்டியிட்ட புகழேந்தி, ராஜாஜி நகர் தொகுதியில் போட்டியிட்ட முனிசாமி, கோலார் தங்கவயல் தொகுதியில் போட்டியிட்ட அன்பு, நரசிம்மராஜா தொகுதியில் போட்டியிட்ட ரவீந்திர குமார், ஹனூர் தொகுதியில் போட்டியிட்ட ரவி படுதோல்வி அடைந்தனர். 
90 சதவிகிதம் தமிழர்களை கொண்ட கோலார் தங்கவயல் தொகுதியில் அதிமுக தவிர காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், கர்நாடக ஜனதா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி சார்பிலும் தமிழர்கள் களமிறக்கப்பட்டனர். ஆனால், இத்தொகுதியில் தமிழர் அல்லாத வேட்பாளரே வெற்றி பெற்றார்.

கர்நாடக ஜனதா கட்சி சார்பில் சிவாஜிநகர், ஜி.வி.ராமன், சாம்ராஜ்பேட்டை ஆகிய தொகுதிகளிலும் தமிழர்கள் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அனைவரும் தோல்வியைத் தழுவினர்.
கோலார் தங்கவயல் தவிர பெங்களூரு புலிகேசி நகரில் பாரதிய ஜனதா சார்பில் நிறுத்தப்பட்ட தமிழரும் தோல்வியைச் சந்தித்தார். முக்கிய கட்சிகள் தவிர கர்நாடக தமிழர் கட்சி சார்பில் சாம்ராஜ்பேட்டை, ஜி.வி.ராமன் தொகுதிகளில் நிறுத்தப்பட்ட தமிழர்களும் வெற்றி பெறவில்லை.