பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2013


77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி 
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 54வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 20 ஒவரில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 99 ரன்கள் குவித்தார்.பின்னர் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி எனற இலக்குடன் களம் இறங்கிய ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதானால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.