பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2013


6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 48 வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இதில்  டாஸ் வென்று
முதலில் பேட் செய்த  டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் 81 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி 13.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 81 ரன்களை எடுத்தது. இதையடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதாராபாத் அணி  வெற்றி பெற்றுள்ளது.