பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2013

80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் :
கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்

 
ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் கைதான ராஜஸ்தான் ராயல் அணி வீரர்களில் ஒருவர் ஸ்ரீசாந்த். இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய
அவர் கடந்த 9-ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

சூதாட்டத்தரகருக்கு சிக்னல் கொடுத்து தனது 2-வது ஓவரில் ஸ்ரீசாந்த் 13 ரன்களை விட்டுக் கொடுத்தார். சூதாட்டதரகரின் விருப்பப்படி அந்த ஓவரில் 14 ரன்கள் கொடுக்க வேண்டும். 13 ரன் கொடுத்து இருந்தாலும் அவர் சூதாட்ட தரகரிடம் இருந்து ரூ.40 லட்சம் பெற்றுள்ளார். 
9-ந்தேதி நடந்த போட்டியின்போது 'நோபால்' விவகாரம் குறித்து ஸ்ரீசாந்துக்கும், சூதாட்டதரகருக்கும் கடும் மோதல் நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது ஓவரில் கடைசி பந்தில் 'நோபால்' வீசாதது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
தான் நோபால் வீசியதாகவும், அதை நடுவர் கவனிக்க வில்லை என்றும், அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று ஸ்ரீசாந்த் சூதாட்ட தரகரிடம் கேள்வி எழுப்பினார். ஒரு கட்டத்தில் ஸ்ரீசாந்தை சூதாட்டதரகர் கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். 
அதோடு பணத்தை தற்காலிகமாகவும் நிறுத்தி வைத்துள்ளார். பின்னர் தனது நண்பரும், சூதாட்ட ஏஜெண்டுமான ஜூஜி மூலம்தான் ஸ்பாட்பிக் சிங்கில் ஈடுபட்டதற்கான பணத்தை ஸ்ரீசாந்த் பெற்றார். இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் இனி ஈடுபட வேண்டுமானால் தனக்கு ரூ.80 லட்சம் தர வேண்டும் என்று ஸ்ரீசாந்த் சூதாட்ட புரோக்கரிடம் கூறி இருக்கிறார். 
ஏற்கனவே ரூ.40 லட்சம் வாங்கி இருந்தார். அதை அவர் 2 மடங்காக உயர்த்தி இருக்கிறார். டெலிபோன் உரையாடல் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்ததாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.