பக்கங்கள்

பக்கங்கள்

1 மே, 2013


ஜெயலலிதா நிறைய வழக்குகளை சந்திக்க வேண்டியதிருக்கும் : ராமதாஸ் ஆவேசம்
தடையை மீறி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட அவரை 15 நாள்
நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பாதுகாப்பு காரணம் கருதி அவர் இன்று இரவு வரை சிறைக்கு அழைத்துச்செல்லப்படாமல் மண்டபம் ஒன்றி ல் தங்க வைக்கப்பட்டிருந்தார். பின்னர் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கே அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’என் மீதும் என் கட்சிக்காரர்கள் மீதும் போடப்பட்டுள்ள பொய் வழக்குகள்.  இந்த வழக்குகளை நாங்கள் சந்திக்க தயார்.  வழக்குகளைக்கண்டு பயப்படுபவன் அல்ல நான்.   சிறைகளில் என்னை அடைப்பதால் பயந்துவிடமாட்டோம்.  
ஜெயலலிதா தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.  வரும் தேர்தலில் அது அவருக்கு தெரியும்.  ஜெயலலிதாவும் நிறைய வழக்குகளை சந்திக்க வேண்டியது வரும்’’என ஆவேசமாக கூறினார்.