பக்கங்கள்

பக்கங்கள்

1 மே, 2013


காடுவெட்டி குரு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ( படங்கள் )
பாமக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி ஜெ.குரு சென்னையில் கைது செய்யப்பட்டார்.  திருவல்லி க்கேணியில் உள்ள சட்டமன்ற விடுதியில் ஜெ.குருவை கைது செய்தது போலீஸ்.



மாமல்லபுரம் வன்னிய சித்திரை முழுநாள் இரவு விழாவில் அனுமதித்த நேரத்திற்கு மேலாக பேசியதன் புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இதையடுத்து சைதாப்பேட்டையில் மாஜிஸ்திரேட் வீட்டில் ஜெ.குருவை ஆஜர்படுத்தினர். அவரை 3.5.2013 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.   இதையடுத்து குருவை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு குருவின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. 
பின்னர் அவர் வேனில் அழைத்துச்செல்லப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.