பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2013


கோயம்பேட்டில் இருந்து சென்னை எல்லை வரை போலீஸ் பாதுகாப்புடன் வெளியூர் பேருந்துகள் இயக்கம்!
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் கைதைக் கண்டித்து அக்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததால்,
சில இடங்களில் இரவு நேர பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் சென்னையில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இரவில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், சென்னையின் எல்லை வரை போலீசார் பாதுகாப்பு பணிக்காக வாகனங்களுடன் செல்வார்கள் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

பேருந்துகள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸை விடுவிக்க வலியுறுத்தி, மக்களுக்கும் இடையூறு அளிக்கும் வகையிலும், பொது சொத்துக்களை சேதப்படுத்தியும் போராட்டங்களில் ஈடுபட்ட 3 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களில் 500 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
பாட்டாளி மக்கள் கட்சியினரின் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.