பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2013


பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பா.ம.க.வின் நடவடிக்கையை ஏற்க முடியாது: தா.பாண்டியன்
ஜாதி மத அடிப்படையில் அரசியல் கட்சிகள் செயல்படுவது தவறானது என தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


ஈரோட்டில் 04,05,2013 அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், 
சேது சமுத்திரத் திட்டத்தை மதத்தின் பெயரால் எதிர்க்கும் தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன், கச்சத்தீவை மீட்கும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பாராட்டு.
ராமதாஸ் கைது விவகாரத்தில், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக பா.ம.க. கட்சித் தொண்டர்கள் செயல்படுவதும், பொதுச் சொத்துகளுக்கு பங்கம் விளைவிப்பதும் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கைகள் என்றார்.