பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2013


இலங்கையில் ஒருங்கிணைந்து, ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழவே தமிழர்கள் விரும்புவதாக இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் 4ம் ஆண்டு விழா கொழும்புவில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய ராஜபட்ச, இலங்கையில் வாழும் தமிழ் மக்களை
, தமிழ் இயக்கங்களும், கட்சிகளும், தொடர்ந்து அழிவை நோக்கியே கொண்டு செல்கின்றன. ஆனால், தமிழ் மக்கள் இலங்கையில், ஒருங்கிணைந்து, ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழவே விரும்புகின்றனர்.
எனினும், இலங்கையில் மனித உரிமை மீறல் என்ற பெயரில் அரசை மண்டியிடச் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் இலங்கையைப் பிளவுபடுத்த ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.