பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2013


மு.க.ஸ்டாலின் கூட்டத்தில்
பெட்ரோல் குண்டு வீச முயற்சியா?

 

திமுக இளைஞரணி பாசறை கூட்டம் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று நடைபெற்றது.  இந்த கூட்டத் தில் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த சமயம், மேடைக்கு முன்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட் டது.  ஒரு இளைஞரை கட்சியினர் அடித்து துவைத்து எடுத்தனர்.  



அதன்பின்னர் காவல்துறையினர் வசம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த இளைஞர் கையில் பெட்ரோல் பாட்டில் வைத்திருந்தார்.  இதனால், அவர் ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீச வந்தாரா? இல்லை, அவர் ராஜா ஆறுமுகத்தின் ஆதரவாளர் என்பதால் அவருக்கு ஆதரவாக, ராஜாவுக்கு முக்கிய பொருப்பு வழங்க கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட வந்தாரா என்பது தெரிய வில்லை.
இது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.