பக்கங்கள்

பக்கங்கள்

31 மே, 2013

பல்வேறு படுகொலைகள், மற்றும் கப்பம்பெறும் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகக் கோஷ்டி தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
. திட்டமிட்ட குற்றங்களை தடுப்பதற்கான பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே. கணேசநாதன் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவரை கைது செய்துள்ளனர்.


பாதுக்கையில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்ட இந்த பாதாள உலகக் கோஷ்டி தலைவரிடமிருந்து நவீன கைத்துப்பாக்கியும் துப்பாக்கி ரவைகளும் கத்தி உட்பட பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அமரசிங்க ஆராய்ச்சிலாகே சுஜித் கிரிசாந் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.

மினுவாங்கொடையில் இடம்பெற்ற இரட்டைக் கொலை உட்பட திவுலுப்பிட்டிய நீர்கொழும்பு பகுதிகளில் இடம் பெற்ற பல கொலைகளுடன் இவர் தொடர்புபட்டவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் 6ற்கும் மேற்பட்ட கொலைகளுடன் தொடர்புபட்ட இவருக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த நபர் பெயரை மாற்றி புதிய அடையாள அட்டைகளைப் பெற்று வேறு பெயரில் செயற்பட்டு வந்துள்ளமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பாதாள உலக கோஷ்டி தலைவர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணையை அடுத்து நீதிமன்றத்தில் இவர் ஆஜராக்கப்படவுள்ளார்.