பக்கங்கள்

பக்கங்கள்

31 மே, 2013

வடக்கில் அரசாங்கம் ஒருபோதும் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது : த.தே.கூ.

வடக்கில் அரசாங்கம் ஒரு போதும் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது. அதனாலேயே தேர்தலை நடத்தாமல் இருக்க பல்வேறு சதிகளை செய்கிறது. அவ்வாறு இல்லையென்றால்
வட மாகாணத்தில் உடனடியாக தேர்தலை நடாத்தி அரசு வெற்றியீட்டிக் காட்டுமாறு கூட்டமைப்பு சவால் விடுத்துள்ளது.வடமாகாண சபை தேர்தலை நடாத்தி அம்மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதாக சர்வதேசத்திற்கு வாக்குறுதி அளித்துள்ள இலங்கை அரசாங்கம், தற்போது அதற்கு எதிராக பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்து 13ஆம் திருத்தச் சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பு – 07 பாண்பிளேஸ், அசாத்சாலி மன்றத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரனே மேற்கண்டவாறு தெரிவித்தார்.