பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2013


தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது 

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 


சென்னையில் குறளகம், கிண்டி ரெயில் நிலையம், உள்பட 9 இடங்களில் மறியல் போராட்டம் நடை பெறும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட வில்லை. தடையை மீறி போராட்டம் நடத்த தொண்டர்கள் திரண்டனர்.
 இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர், ஆவடி, கிண்டி, செங்குன்றம், மணலி, திருவொற்றியூர், குன்றத்தூர், திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  திருவாரூர் மாவட்டத்தில் 9 இடங்களில் சிபிஎம் கட்சியினரின் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது.
 சிதம்பரத்தில் போரட்டத்தில் ஈடுபட்ட 65 பேர் கைது செய்யப்பட்டனர். மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர். பல்வேறு பகுதிகளில் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.