வெசாக் தினமான இன்று கண்டி புனித தலதா மாளிகைக்கு அருகில் பௌத்த பிக்கு ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை சுமார் 11 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மாடுகள் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிக்கு தனக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார்.
உடம்பில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட பிக்குவை அருகில் இருந்தவர்கள் பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.