பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2013



கிரிக்கெட் வீரர் ரெய்னாவும் நடிகை ஸ்ருதிஹாசனும் நெருங்கி பழுகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் அதன் பிறகு
தனுஷுடன் இணைந்து 3 என்கிற படத்தில் மட்டும் நடித்தார். இந்தப் படம் சரியாக போகாததால் அவருக்கு தமிழில் மேலும் வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதைதொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்திய ஸ்ருதிக்கு கைமேல் பலன் கிடைத்தது. அங்கு பிஸியான நடிகையாகிவிட்டார்.
இருப்பினும், ஸ்ருதிஹாசனை தேடி நாள்தோறும் புதிது புதிதான கிசுகிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் இணைந்து பேசப்பட்ட இவர் இப்போது கிரிக்கெட் வீர்ர் ரெய்னாவுடன் கிசுகிசுக்கப்படுகிறார். அதாவது கிரிக்கெட் வீரர் ரெய்னாவும் ஸ்ருதியும் நெருங்கி பழகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரெய்னா அண்மையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நடந்த ஆட்டம் ஒன்றில் 52 பந்தில் 99 ரன்கள் எடுத்து அசத்தினார். அந்த போட்டியை ஸ்ருதிஹாசனும் நேரில் பார்த்து ரெயினாவை உற்சாகப்படுத்தினார். அதோடு இருவரும் நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றாக விருந்து சாப்பிடுவதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.